டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு DOTE மூலம் Courier செய்யும் முறையில் செய்துள்ள மாற்றங்கள்

டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு DOTE மூலம் Courier செய்யும் முறையில் செய்துள்ள மாற்றங்கள்

நம்ம இந்த பதிவில் டிப்ளமோ ஏப்ரல் 2021 ஆன்லைன் எக்ஸாம் எழுத உள்ள மாணவர்களுக்கு DOTE மூலம் Courier செய்யும் முறையில் செய்துள்ள மாற்றத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

  • மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, Original Answer ஸ்கிரிப்ட்களை அனுப்பும் நடைமுறையில் பின்வருமாறு மாற்றம் DOTE மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • விடைப்புத்தகங்களை (Answer Sheets) தேர்வு நடந்த அதே நாளில் தனித்தனியாக அனுப்பப்பட வேண்டியதில்லை.

Regular Students விடைத்தாள் அனுப்பும் விதிமுறைகள்:

  • ரெகுலர் மாணவர்கள் தங்களது விடைத்தாளை தினமும் கொரியர் அனுப்ப தேவை இல்லை அதற்கு மாறாக தங்களுடைய ரெகுலர் விடைத்தாள் அனைத்தையும் ரெகுலர் தேர்வு முடிந்த உடன் அவற்றை ஒரு Cloth Lined Cover இல் ஒரு சேர வைத்து அவரவர் கல்லூரியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • அதேபோல் அம் மாணவர்களுக்கு அரியர் தேர்வு இருந்தால் அவை அனைத்தையும் எழுதி அம்மாணவனின் கடைசித் தேர்வு முடிந்தவுடன் இவை அனைத்தையும் ஒரு Cloth Lined Cover இல் வைத்து அனுப்ப வேண்டும்.
  • இவை அனைத்தையும் அனுப்பும் பொழுது ஒவ்வொரு Cloth Lined Cover லும் Summary Sheet -இல் நீங்கள் எழுதிய அனைத்து பாடங்களின் Date of Examination, Subject Code, Session, Name of the Examination, Register Number, Institution code, இவை அனைத்தையும் அதில் கவனமாக நிரப்பி அனுப்ப வேண்டும்.

Supplementary மாணவர்கள் , Grace chance மாணவர்களுக்கான விதிமுறைகள்:

  • Supplementary மாணவர்கள் மற்றும்  Grace chance மாணவர்கள் அவர்களுக்கு இருக்கும் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்த பின்னர் அவர்கள் எழுதிய அனைத்து விடைத்தாள்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு Cloth Lined Coverஇல் வைத்து அனுப்ப வேண்டும்.
  • அதனுடன் Summary Sheet -இல் Date of Examination, Subject Code, Session, Name of the Examination, Register Number, Institution code, இவை அனைத்தையும் கவனமாக நிரப்பி அதனுள் வைத்து அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்புகள் :

  • மாணவர்கள் தங்களின் தேர்வு முடிந்த உடன் Google Form Sheet- இல் விடைத்தாள் Uploading குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் தங்களின் விடைத்தாள் திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
  • மேலும் ஒவ்வொரு பாடத்தின் விடைத்தாள் களையும் தனித்தனியாக நூலினால் கட்டி ஒரு சேர வைத்து பார்சல் அனுப்ப வேண்டும்.
  • பதிவேற்றப்பட்ட விடைத்தாள் மற்றும் Hard Copy விடைத்தாள் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லை என்றால் தங்களின் விடைத்தாள் திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

இந்த அனைத்து தகவலையும் பின்பற்ற தேர்வு வாரிய தலைவர் தனது அறிக்கையில் கூறி உள்ளார்

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

LATEST UPDATE:

Board Exam April 2021 DESPATCH OF ANSWER SCRIPTS SUMMARY SHEET- Click Here

Board Exam April 2021 Grace Chance Equivalent Papers PDF – Click Here

Board Exam April 2021 Time Table- Click Here

Board Exam April 2021 A4 Sheet Model- Click Here

  More Information Detailed Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!