கருப்பு பூஞ்சை வைரஸ்-அறிகுறிகள்-தற்காப்பு முறைகள்: ஓர் அலசல்| Black Fungus Virus Symptoms and Protection

கருப்பு பூஞ்சை வைரஸ்-அறிகுறிகள்-தற்காப்பு முறைகள்: ஓர் அலசல் | Black Fungus Virus Symptoms and Protection

  • கொரோனா வைரஸ் அதிர் வலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் தற்போது கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களை குறி வைத்து தாக்குகிறது கருப்பு பூஞ்சை வைரஸ். இந்தப் பதிவானது கருப்பு பூஞ்சை நோய், அதன் அறிகுறிகள், அது எப்படி பரவுகிறது, அதை எப்படி தடுப்பது போன்றவற்றை விளக்குகிறது.

கருப்பு பூஞ்சை வைரஸ்

  • மியூகார்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை வைரஸ் குறிப்பாக கொரோனா நோயிலிருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகளை பெருமளவு பாதிக்கிறது.
  • இந்த பூஞ்சையானது காற்றில் பரவி காணப்படும். அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகமாக இருக்கும். சுவாசிக்கும் போது மூக்கில் உள்ள திசுக்களை பாதிக்கும். இது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே தாக்குகிறது.

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்

இந்த கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் பின்வருவன.

  • கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் தோன்றும்.
  • முகத்தில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். பார்வை குறைபாடு, பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாக தெரியும்.
  • கருப்பு பூஞ்சை நோய் மூலம் கண் பார்வை தெரியாமல் போவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடியும்.
  • கருப்பு பூஞ்சை நோயால் இறப்பு கூட நேரிடலாம் எனவும் கூறுகின்றனர்.

கருப்பு பூஞ்சை தற்காப்பு முறைகள்:

  • கருப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம்.
  • இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த நோயானது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
  • ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரித்தல், அவசியம் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல், வெளியே செல்லும் போது இரட்டை முகக்கவசத்தை அணிதல் ஆகியனவற்றை பின்பற்றுவதன் மூலம் இந்த நோயிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம்.

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

மேலும் விவரங்களுக்கு விளக்கமான வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!