இந்த கல்வி ஆண்டிற்கான 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் | 11th Standard Admission Guidelines for the Academic Year 2021-2022
இந்த கல்வி ஆண்டிற்கான 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் | 11th Standard Admission Guidelines for the Academic Year 2021-2022
நாம இந்த பதிவில் 11-ம் வகுப்பு 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை பார்க்க உள்ளோம் .
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுப் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
- தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட்-19 பெரும்நொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
- மிக அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், பள்ளி அளவில் ஆசிரியர்களால் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, தேர்வு வைத்து மாணவர்களை அனுமதிக்கலாம்.
- பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜுன் 3வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத்துவங்கலாம் எனவும் வலியுறுத்தி உள்ளது.
- +2 மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும், உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.
என 11-ம் வகுப்பு 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் அறிவித்துள்ளார்.
Latest Update:
- 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here











