Diploma April 2022 Exam Revaluation Instructions
Diploma April 2022 Exam Revaluation Instructions
Diploma April 2022 Exam Revaluation Result Link Given Below…….
Diploma April 2022 தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் DOTE வெளியிட்டுள்ளது.

Diploma ஏப்ரல்- 2022 க்கான பட்டயத் தேர்வு முடிவுகள் 29.07.2022 அன்று வெளியிடப்பட்டது. பொறியியல் இரண்டாமாண்டு நேரடி மாணாக்கர்களுக்கு சேர்க்கைக் (Lateral Entry) கான கலந்தாய்வு 18.08.2022 முதல் நடைபெற உள்ளது. இதனால், இதற்கு விண்ண ப்பிக்கும் மாணாக்கர்கள், முதல் விடைத்தாள் நகலுக்கும் பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில், உரிய நேரத்தில் கலந்தாய்விற்கு முன்பதாக மாணாக்கர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட இயலாது. எனவே, Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, விரைவில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகளை DOTE வெளியிட திட்டமிட்டுள்ளது .
Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களுக்கு மட்டும் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்க இந்த ஒரு முறை மட்டும் மாணாக்கர்கள் விடைத்தாள் நகலுடன் மறுமதிப்பீட்டிற்கும் சேர்த்து விண்ணப்பிக்கவும் ரூ.500/- (ரூ.100/- +ரூ.400/-) வசூலிக்க வேண்டும். மாணாக்கர்கள் கல்லூரி முதல்வர் மூலமாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Express Revaluation:
டிப்ளமோ III Year தேர்வு எழுதிய மாணவர்கள் ஏதாவது சப்ஜெக்ட்டில் அரியர் இருந்தால் மற்றும் மறுகூட்டலுக்கு (Markகுறைந்திருக்கும் மாணவர்கள்) Revaluation அப்ளை செய்ய விரும்பினால் நீங்கள் உங்களுடைய Revaluation போட விரும்பும் Subjectன் ரிசல்ட்டை விரைவாக பெற விரும்பினால் ரூபாய் 500 செலுத்தி (ஒவ்வொரு Subject க்கும் தனித்தனியாக ) எக்ஸ்பிரஸ் Revaluationக்கு அப்ளை செய்யலாம். இந்த எக்ஸ்பிரஸ் Revaluationக்கு அப்ளை செய்ய 04.08.2022 கடைசி நாளாகும். இந்த எக்ஸ்பிரஸ் Revaluation முறையில் அப்ளை செய்தால் உங்களுடைய ரிசல்ட் ஆனது 12.08.2022 அன்று வெளியிடப்படும். இந்த Revaluation முறையானது 6th செமஸ்டர் III Year தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். அதாவது III Year எக்ஸாம் எழுதிய Passed Out மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். III Year மாணவர்கள் நீங்கள் உங்களுடைய கல்லூரிக்கு சென்று நாளை முதல் இந்த Revaluation க்கு ரூபாய் 500 செலுத்தி (ஒவ்வொரு Subject க்கும் தனித்தனியாக ) அப்ளை செய்யலாம்.
Ordinary Revaluation:
மற்ற மாணவர்கள் சாதாரண Revaluationக்கு அப்ளை செய்ய ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெறலாம். ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி நீங்கள் Revaluationக்கு அப்ளை செய்யலாம் First Year and Second Year மற்றும் Third Year தேர்வு எழுதிய மாணவர்கள் Apply செய்யலாம். Third Year தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் என்னால் 500 ரூபாய் செலுத்த முடியாது, நான் என்னுடைய பேப்பரை பார்த்த பிறகு தான் Revaluationக்கு அப்ளை செய்வேன் என்று நினைத்தால் ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற்று நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி இந்த Revaluationக்கு Apply செய்யலாம். Ordinary Revaluation Apply செய்வதற்கு 12.08.2022 கடைசி நாளாகும். உங்களுடைய தேர்வு முடிவானது 09.09.2022 அன்று தான் வெளியாகும்.
Express Revaluationக்கு Apply செய்தால் 12.08.2022 அன்று உங்களுடைய ரிசல்ட் ஆனது வெளியாகும். சாதாரண ரீவேளேசனுக்கு அப்ளை செய்தால் 09.09.2022 அன்று தான் உங்களுடைய ரிசல்ட் வெளியாகும். Express Revaluation முறைக்கு Third இயர் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
Revaluation Date and Result Details:
Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களுக்கு:

மற்ற மாணவர்களுக்கு:


மாணாக்கர்கள் கல்லூரி முதல்வர் (Principal) மூலமாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு இந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
TNDTE Diploma April 2022 Express Revaluation Result Link:










