Diploma April 2021 Board Exam எழுதிய Grace Chance மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி
Diploma April 2021 Board Exam எழுதிய Grace Chance மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி | Diploma April 2021 Board Exam Grace Chance Students Happy News
Diploma April 2021 Board Exam சிறப்பு வாய்ப்புக்கு (Grace Chance) செலுத்தப்பட வேண்டிய Exam Fees மற்றும் Registration Fees விவரங்கள் புதியதாக நிர்ணயிக்கப்பட்டதால், April 2021 பட்டயத் தேர்வு Grace Chance Exam எழுதிய அனைத்து Government, Government Aided மற்றும் Self Financing பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் கூடுதல் தொகை செலுத்தி இருந்தால் அத்தொகையினை சம்மந்தப்பட்ட மாணாக்கர்களின் வங்கி கணக்கில் நேரிடையாக NEFT முறையில் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, ஏப்ரல் 2021 Board Examக்கு சிறப்பு வாய்ப்புக்கென (Grace Chance) ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு Rs 750 தேர்வுக் கட்டண தொகையினை செலுத்திய மாணாக்கர்களின் வங்கி கணக்கில் கூடுதல் தொகை நேரிடையாக NEFT முறையில் செலுத்துவதற்கு DOTE நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே கூடுதல் தொகை செலுத்திய மாணாக்கர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை 01,11.2022 க்குள் சம்மந்தப்பட்ட பயிலகத்திற்கு நேரிடையாகவோ (அ) தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மாணாக்கர்கள் வங்கி கணக்கு விவரங்களை சம்மந்தப்பட்ட வங்கியுடன் சரிபார்த்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணாக்கர்கள் வங்கி கணக்கு விவரங்களை அனுப்புவதில் தவறு ஏற்படின் அதற்கு சம்மந்தப்பட்ட மாணாக்கரே பொறுப்பேற்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு விவரங்கள் பெறப்பட்ட மாணாக்கர்களுக்கு மட்டுமே அவர் செலுத்தியுள்ள கூடுதல் தேர்வுக் கட்டண தொகை அவரது வங்கி கணக்கில் நேரிடையாக NEFT முறையில் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற விவரமும் DOTE தெரிவித்து உள்ளது .
01.11.2022 க்குள் மாணாக்கர்கள் விவரங்கள் அனுப்பி வைக்கவில்லை என்றால் மாணாக்கர்கள் கூடுதல் Exam Fees அரசு கணக்கில் செலுத்தப்படும் என்கிற விவரம் DOTE தெரிவித்து உள்ளது.
1 Subjectக்கு மேல் April 2021 Exam எழுத Exam Fees செலுத்திய Grace Chance Exam எழுதிய மாணவர்கள் உங்களுடைய கல்லூரிக்கு சென்று கீழ் குறிப்பிட்டுள்ள Details and Documents, Submit செய்ய வேண்டும்.
மாணவர்கள் கல்லூரியில் கொடுக்க வேண்டிய Documents :
- Bank Account Number (Candidate should be the Account Holder or one of the Account Holder)
- Bank Account Number IFSC Code (11 digits)
- Name of the Bank
- Mobile Number (10 digits)
- Bank Pass Book (Original)

மாணவர்கள் இந்த விவரங்களை 01.11.2022 க்குள் கொடுத்தால் உங்களுடைய Excess Exam Fees Amount உங்களது Bank Accountஇல் DOTE சில தினங்களில் Amount ஐ Credit செய்துவிடும் .










