TN 10th and 12th Temporary Marksheet  2022

TN 10th and 12th Temporary Marksheet  2022 | Yuvasallinfo

TN 10th and 12th Temporary Marksheet  2022 | Yuvasallinfo

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று முன்தினம் 20.06.22 அன்று வெளியானது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

TN 10th and 12th Temporary Marksheet  2022
TN 10th and 12th Temporary Marksheet  2022

இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது . வரும் 29ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

For More Information:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

 

நாளை மறுதினம் 24.6.22 அன்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் 20.06.22 அன்று வெளியானது. இந்த நிலையில் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்  24-ந்தேதி  காலை 11 மணி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

இதுதவிர, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கும் 22-ந்தேதி (இன்று) முதல் 29-ந்தேதி மாலை 5 மணி வரையிலும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் எழுதிய தேர்வு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Marksheet Download Link:

For More Information:

Whatsapp

Telegram

Group 1Join Here
Group 2Join Here
Group 3Join Here
Group 4Join Here
Group 5Join Here
Group 6Join Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!