தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு | தமிழக அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் | Yuvasallinfo

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு | தமிழக அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் | Yuvasallinfo

தமிழகத்தில் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவலை அடுத்து கல்லூரிகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து அவ்வப்போது கல்லூரிகளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டன.

எனினும் கொரோனாவின் 2ஆவது அலை காரணமாகஅவை மீண்டும் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்கள் வகுப்புகளை கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவின் 2ஆவது அலை ஓய்ந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அறிவித்துள்ளது.

 

செப்டம்பர் 1:

செப்டம்பர் 1 ம் தேதி முதல், கல்லுாரிகளை திறப்பதற்கான வழிகாட்டு முறைகள் மற்றும் வாரம் மூன்று நாட்கள் வகுப்பு நடத்தும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டுக்கு, ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகள்:
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியை சேர்ந்த மாணவர்களை, நேரடி வகுப்பில் அனுமதிக்கக் கூடாது. அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் தடுப்பூசி போட்ட சான்றிதழை, அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும். சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்

*வளாகத்தை சுத்தம் செய்து, மாணவர்களை சோதனை செய்து அனுப்பும் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமி நாசினியால் சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

*விளையாட்டு உள்ளிட்ட மற்ற செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். வெளியில் இருந்து நிபுணர்கள் வந்து செல்வதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி நிலையங்களை, உரிய வழிகாட்டுதலுடன் திறக்க வேண்டும். நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை

அவசர தொடர்பு எண், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவற்றை மாணவர்கள் அறியும் வகையில், வளாக பகுதிகளில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்

 

ஆன்லைன்

கட்டாயம் தேவைப்படும் மாணவர்களுக்காக விடுதிகளை திறக்கலாம். அங்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்

மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்க முடியாது. அவர்களுக்கான, ஆன்லைன் வகுப்பு நடத்துவதை தொடர வேண்டும்

நேரடி வகுப்பு நாட்களை தவிர, மற்ற நாட்களில், ஆன்லைன் வழி வகுப்புகளை நடத்த வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்ததும், ஒரு வாரம் தயார்படுத்தும் பயிற்சி வழங்க வேண்டும். பின், ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்

புத்தகங்கள் மற்றும் வேறு பொருட்களை மாணவர்கள், இரவலாக வாங்கி பயன்படுத்தக் கூடாது.  லேப்டாப் உள்ளிட்ட மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

நேரடி வகுப்பு அட்டவணை

பி.ஏ., – பி.எஸ்சி., – பி.எல்., – பி.சி.ஏ., – பி.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., உள்ளிட்ட மூன்று ஆண்டுகள் உடைய டிப்ளமா, இளநிலை, முதுநிலை பட்ட படிப்புகள்- இரண்டாம் ஆண்டுக்கு திங்கள், புதன், வெள்ளி; மூன்றாம் ஆண்டுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும்

எம்.ஏ., – எம்.எஸ்சி., – எம்.காம்., – எம்.இ., – எம்.எல்., – எம்.வி.எஸ்சி., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆறு நாட்களும் வகுப்பு நடக்கும்.

பி.இ., – பி.டெக்., – பி.எஸ்சி., உள்ளிட்ட, நான்கு ஆண்டு பட்டப்படிப்புகளில், இரண்டாம் ஆண்டுக்கு திங்கள், புதன், வெள்ளி; மூன்றாம் ஆண்டுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனி; நான்காம் ஆண்டுக்கு ஆறு நாட்களும் வகுப்புகள் நடக்கும்

பி.ஆர்க்., – பி.வி.எஸ்சி., — சட்ட படிப்புகள் உள்ளிட்ட ஐந்து ஆண்டு படிப்புகளில், இரண்டு மற்றும் நான்காம் ஆண்டுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி; மூன்று மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி வகுப்புகள் நடக்கும்.

 

கல்லூரிகள்:

அந்த வகையில் கல்லூரிகளும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள், போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

 

மாணவர்கள்:

ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.

தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.

தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை தயார் நிலையில் கல்லூரிகள் வைத்திருக்க வேண்டும்.

கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளை தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும்.

நோய்த் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

 

யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை:

மாற்றுத் திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

கல்லூரியில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக், டயர்கள், உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

அது போல் விஷ ஜந்துக்கள் உள்ளே புகாத வண்ணம் அடைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.

சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரியை சுத்தப்படுத்த வேண்டும் என அந்த வழிகாட்டும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்:

தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு அவற்றை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதில் ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் கட்டாயம் இரு தவணை தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும்.

அது போல் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளி விட்டு அமர வேண்டும்.

தடுப்பூசி போடாத ஊழியர்கள்,ஆசிரியர்களை பள்ளிகளுக்குள் நுழைய விடக் கூடாது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு அன்றாடம் உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும்.

ஒரு வேளை யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிக் கூடாது என்பன உள்ளிட்ட பல வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இதையொட்டி பள்ளிகளை சுத்தப்படுத்துவது குறித்தும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!