10th and 11th Supplementary Exam September 2021 | பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுகள் செப்டம்பர் 2021
10th and 11th Supplementary Exam September 2021 | பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுகள் செப்டம்பர் 2021
செய்திக் குறிப்பு
செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) துணைத் தேர்வுகளுக்கு தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் 07.08.2021 காலை 11.30 மணி முதல் 11.08.2021 வரையிலான நாட்களில் (07.08.2021 தவிர மற்ற நாட்களில் காலை 10.00 மணி முதல் 05.45 மணி வரை – 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Govemment Examinations Service centres) வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
சிறப்பு அனுமதித் திட்டம்
07.08.2021 முதல் 11.08.2021 வரையிலான தேதிகளில் செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 12.08.2021 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆன்-லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (பத்தாம் வகுப்புத் தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் – ரூ.500/– மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் – ரூ.1000/-)
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கும் தேர்வர்களின் கவனத்திற்கு
முதல் முறையாக நேரடி தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் 2012-ஆம் ஆண்டுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் 07.08.2021 காலை 11.30 மணி முதல் 11.08.2021 மாலை 05.45 மணி வரையிலான நாட்களில் (08.08.2021 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) 2021 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தேர்வர்கள் சேவை மையங்கள் வாயிலாக தேர்வெழுத விண்ணப்பித்த பின், விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டுடன் 12.08.2021 முதல் 17.08.2021 வரையிலான நாட்களில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு கட்டணம் ரூ.125/-ஐ செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்புத் தேர்வுக் கட்டணம்:
தேர்வுக் கட்டணம் ரூ.125/
ஆன்-லைன் பதிவுகட்டணம் ரூ.50/
மொத்தக் கட்டணம் ரூ.175/
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை : –
தேர்வுக் கட்டணம் ரூ.125/– மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50/- சேர்த்து மொத்தம் ரூ. 175/-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் சேவை மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
மேல்நிலைமுதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கும் தேர்வர்களின் கவனத்திற்கு முதன்முறையாக மேல்நிலை முதலாம் ஆண்டு மேல்நிலைத் தேர்வினை தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களும் ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்களில் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை :
1. ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள்
2.மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணமும், பதிவுக் அதனுடன் இதரக் கட்டணமாக கட்டணம் ரூ35/-ம் செலுத்தவேண்டும்.
ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/
தேர்வுக் கட்டணம் ரூ.150/- இதரக் கட்டணம் ரூ.35/- மொத்தம் ரூ.185/
தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் விநியோகம் :
ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக் நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
பொதுவான அறிவுரைகள்:
தேர்வர்கள் செப்டம்பர்2021 துணைத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்க சேவை மையங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும்.
அரசின் கொரோனா கால நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
Time Table:
10th Standard:

12th Standard:

10th , 11th Time Table Download: Click Here
For More Details Visit:
Telegram | |
| Click Here | Click Here |











