TN 12th Mark sheet 2021 Released Today | பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் 

TN 12th Mark sheet 2021 Released Today | பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் 

  • பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம் 19.7.21 அன்று வெளியானது.  இன்று முதல் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா பரவல் பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு இன்றி மதிப்பெண் வழங்குவது குறித்த, வழிகாட்டு முறையை முடிவு செய்ய, மதிப்பெண் நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, மதிப்பெண் வழங்கும் முறை முடிவானது.

மதிப்பெண் கணக்கீடு:

  • பிளஸ் 2 செய்முறை தேர்வின், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில், 20 சதவீதம் மற்றும், 10ம் வகுப்பில் அதிகபட்சம் மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில், 50 சதவீதம் சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண்ணாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் விபரம், 19.7.21 அன்று அரசு தேர்வு துறையால் வெளியிடப்பட்டது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், அரசு தேர்வு துறை அலுவலகத்தில், காலை, 11 மணியளவில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்.
  • தொடர்ந்து அவர், ‘600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எவருமில்லை. கொரோனா சூழலை பொறுத்து தனித்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து தமிழக முதல்வருடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறக்கப்படாத இன்றைய சூழலில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

மதிப்பெண் விபரம்:

  • “டெசிமல் முறையில் மதிப்பெண்” , இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண்களை விகிதாச்சாரத்தின் படி கணக்கிட்டு, அரசு தேர்வுத் துறை நிர்ணயித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்கள் விகிதாச்சாரத்தில் கணினி முறையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
  • அதனால், மதிப்பெண்கள் மிக சரியாக, “டெசிமல்” எனப்படும், தசம எண் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.எனவே, மதிப்பெண்கள் முழு எண்ணாக மாற்றப்படாமல், அப்படியே டெசிமல் முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளன.

மதிப்பெண் பட்டியல்:

  • மதிப்பெண் பட்டியலை, www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில், இன்று  காலை, 11:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்த பின்னரே, மதிப்பெண் பட்டியலை &’டவுண்லோடு&’ செய்ய முடியும்.

12th Mark Sheet Download Link:

www.dge.tn.gov.in

www.dge.tn.nic.in

நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!