Tamilnadu School and College Students Information

Tamilnadu School and College Leave Updates 

Tamilnadu School and College Leave Updates 

School and College Leave Announcement  Update (09.12.2022):

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

School and College Leave Announcement  Update: 

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் இன்று (9.12.2022) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு .

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 09) விடுமுறை அறிவிப்பு .

புயல் எச்சரிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு. 

School and College Leave Announcement  Update (08.12.2022): 

தமிழகத்தில் நாளை (9.12.2022) சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

For More Details:

Rain  Update (20.11.2022):

20.11.2022:தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain  Update (17.11.2022):

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 17-ம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Rain  Update (16.11.2022):

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Today Leave Announcement  Update (15.11.2022):

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

Rain  Update (14.11.2022):

தமிழகத்தில் இம்மாதம் 18-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழைக்கும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பொழிய உள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று (நவம்பர் 14) இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

16.11.2022 முதல்  18.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 Today Leave Announcement  Update (14.11.2022):

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று 14/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவிப்பு.

இன்று (14.11.2022) மழையின் காரணமாக குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tomorrow Weather  Update (14.11.2022):

கேரள – தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தமிழ்நாட்டில் காரணமாக, மழை பெய்து வருகிறது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16.11.2022 மற்றும் 17.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 Leave Announcement  Update (11.11.2022):

இன்று சனிக்கிழமை என்றாலும், பழைய விடுமுறைகளை ஈடுகட்ட பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கனமழை காரணமாக கீழ்காணும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-
1.சென்னை
2.திருவள்ளூர்
3.காஞ்சிபுரம்
4.கடலூர்
5.சேலம்
6.திருச்சி
7.கரூர்
8.செங்கல்பட்டு
9.மயிலாடுதுறை
10. திருவாரூர்
11.திருவண்ணாமலை
12.அரியலூர்
13.ராணிப்பேட்டை
14.திண்டுக்கல்
15.விழுப்புரம்
16. வேலூர்
17. நீலகிரி
18.தேனி
19.கோவை
20.பெரம்பலூர்
21. கள்ளக்குறிச்சி
22. தஞ்சாவூர்
23.திருப்பத்தூர்
24.ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
25.புதுக்கோட்டை
26. சிவகங்கை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave Announcement  Update (10.11.2022):

இதன் காரணமாக இன்று முதல் 13ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், வேலுர், ராணிப்பேட்டை, திருவாரூர், அரியலூர், நீலகிரி, செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave Announcement  Update (10.11.2022):

தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu School and College Students Information
Tamilnadu School and College
Students Information

கனமழை எச்சரிக்கையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மழையின் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (11.11.2022) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு.

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) ஓரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ்உத்தரவு.

சேலம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று (11.11.2022)பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவு. 

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். 

தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

For More Study Materials

For More Study Materials Join:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!