கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் தங்கள் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறை | Antigen Rapid Test
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் தங்கள் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறை | Antigen Rapid Test
- இப்பதிவானது கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் தங்கள் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையான Antigen Rapid Test முறையை முழுமையாக விளக்கும்.
- கொரோனா தொற்றை வீட்டிலிருந்தவாறே கண்டறியும் Antigen Rapid Test முறைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
- இதற்கு முன் RT-PCR Test மூலம் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டறிந்தனர் இந்த Test எடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு தான் நமக்கு Result கிடைக்கும்.
- நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற கொரோனோ நோய் தாக்கத்தின் காரணமாக அதிகளவு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் Test எடுத்து பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டறிய இந்த Antigen Rapid Test முறையை நம் நாட்டில் தற்போது கொண்டு வந்திருக்கிறார்கள்.
- இந்த முறையை பயன்படுத்தி 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை எளிதில் கண்டறியலாம்.
செய்முறை விளக்கம்
- இந்த Antigen Rapid Test Kit யில் ஒரு liquid, தொண்டை மற்றும் மூக்கில் உள்ள சளி Sample யைஎடுக்க ஒரு Swab கொடுக்கப்பட்டு இருக்கும்.
- தொண்டை மற்றும் மூக்கின் உள் Swab யை நுழைத்து 10 முறை சுழற்றி சளி Sample யை எடுத்து அதனை அந்த liquid யில் நன்கு கரைய விட வேண்டும். பின் அந்த liquid யை kit யில் இரண்டு அல்லது மூன்று துளிகள் விட்டு 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும்.
- பிறகு கொரோனா அறிகுறி உள்ளது என்றால் Positive என்றும், இல்லை என்றால் Negative என்றும் Result வரும். இந்த Antigen Rapid Test முறையின் மூலம் நாம் வீட்டில் இருந்தபடியே நோயின் தாக்கத்தை மிகவும் எளிதில் கண்டறியலாம்.
- இந்த kit யின் விலை ரூபாய் 250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த Antigen Rapid Test Kit அடுத்த வாரம் முதல் இந்தியா முழுவதுமாக உள்ள ஏழு லட்சம் மருந்தகங்களில் விற்பனைக்கு வர உள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த முறையை பயன்படுத்தி பயனடையுங்கள்.
நம்ம டெலிகிராம் சேனல் உடைய லிங்க்கை கீழே கொடுத்திருக்கோம் அந்த Group ல எல்லாரும் ஜாயின் பண்ணிக்கோங்க – Click Here
மேலும் விவரங்களுக்கு விளக்கமான வீடியோ











