TNPSC Exam Study Materials | TNPSC அரசியலமைப்பு உருவான வரலாறு | Yuvasallinfo
TNPSC Exam Study Materials | TNPSC அரசியலமைப்பு உருவான வரலாறு | Yuvasallinfo
TNPSC Group 2 Hall Ticket Released:
Commission has invited applications for direct recruitment for the Posts included in Combined Civil Services Examination-II (Interview Posts / Non Interview Posts) (Group-II Services / Group-IIA Services) vide Notification No. 03/2022, dated:23.02.2022 scheduled to be held on 21.05.2022 FN respectively. The memorandum of admission (Hall Ticket) for the candidates who have been admitted for the said examination have already been hosted in the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded through one time Registration (OTR) of the candidate by entering the Application Number and Date of Birth.

Hall Ticket Download
Link1-Click Here
Link2-Click Here
For More Details Join:
INC Sample Materials:
அரசியலமைப்பு என்பது நமது நாட்டின் அடிப்படைச் சட்டமாகும். இச்சட்டம் சில அடிப்படைக் கோட்பாடுகள் (Basic Principles) அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே நம் நாடு நிர்வகிக்கப்படுகிறது. அரசியலமைப்பானது அரசின் பல்வேறு அங்கங்கள் எவ்வாறு செயலாற்ற வேண்டுமென்றும், அவ்வங்கங்கள் வழிநடத்தப்பட வேண்டிய விதிகளையும் தன்னுள் அடக்கியது. மேலும் அரசும் குடிமக்களும் தங்களுக்குள் கலந்துரையாடும் முறையினையும் கூறுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின்ன பல முக்கிய நிகழ்வுகள் அரசியல் சட்டங்கள் உருவாக காரணமாக அமைந்தன. அதில் முதலாவதாக, சிழக்கிந்திய கம்பெனி பல சட்டங்களை இயற்றி இந்தியாவை ஆண்டது.

ஒழுங்குமுறைச்சட்டம், 1773
- இச்சட்டம் வங்காளத்தின் கவர்னரை ஜெனரலாக மாற்றியது. அவருக்கு உதவியாக நான்கு பேர் அடங்கிய நிர்வாகக் குழு ஒன்றையும் ஏற்படுத்தியது.
- வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் முதல் கவர்ணர் ஜெனரல் ஆவார்.
- இச்சட்டம் உச்சநீதிமன்றம் (1773) கல்கத்தாவில் அமைய வழிவகை செய்தது. இதில் ஒரு தலைமை நீதிபதியையும். 3 இணை நீதிபதிகளையும் அமைத்தது.
- இச்சட்டம் முதல் முறையாக மைய அரசாங்கம் அமைவதற்கான அடித்தளமானது.
பிட் இந்தியச் சட்டம், 1784
- இச்சட்டம் ஆங்கிலலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக மற்றும் அரசியல் நடவடிக்கைகளைப் பிரித்தது.
- இயக்குநர் குழு – வர்த்தக நடவடிக்கை
- கட்டுப்பாட்டுக்குழு -அரசியல்நடவடிக்கை
இரண்டு முக்கிய ஷரத்துகள்
- முதன் முறையாக கம்பெனியின் இந்திய ‘பிரிட்டிஷ் இந்தியாவின் நிலப்பகுதிகள்’ என்று அறிவிக்கப்பட்டது.
- பிரிட்டிஷ் அரசுக்கு கம்பெனியின் இந்திய நிர்வாகத்தை மேற்பார்வையிடும் தகுதி அறிவிக்கப்பட்டது.
பட்டயச் சட்டம், 1833
- இச்சட்டம் நிர்வாகத்தை மையப்படுத்துவதன் கடைசி முயற்சி ஆகும்.
- வங்காளத்தின் கவர்னர் ஜெனரலை இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக்கியது, மேலும் அவருக்கு அனைத்து நிர்வாக மற்றும் இராணுவ அதிகாரங்களும் அளிக்கப்பட்டன.
- இவ்வாறாக, இச்சட்டம் இந்தியா முழுமைக்குமான ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷாருக்கு வழங்கியது.
- அப்போது இருந்த வில்லியம் பென்டிங்க் பிரபு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என அழைக்கப்பட்டார்.
- இச்சட்டம் பம்பாய் மற்றும் மெட்ராஸ் மாகாணங்களின் சட்டம் இயற்றும் அதிகாரங்களை பறித்து, இந்தியாவின் கவர்னர் ஜெனரலுக்கு சட்டமியற்றும் அனைத்து அதிகாரங்களையும் வழங்கியது.
- மேலும், இச்சட்டம் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக அதிகாரங்களைப் பறித்து அதனை ‘வெறும் நிர்வகிக்கும் அமைப்பாக’ மாற்றியது.
பட்டயச் சட்டம், 1853
- இச்சட்டம், முதல் முறையாக கவர்னர் ஜெனரலுடைய கவுன்சிலின் ஆட்சி செலுத்தும் மற்றும் சட்டமியற்றும் அதிகாரங்களைப் பிரித்தது.
- இச்சட்டம் 6 புதிய சட்டமியற்றும் உறுப்பினர்களை கவர்னர் ஜெனரலின் கவுன்சில் சேர்த்தது.
- கவர்னர் ஜெனரலின் சட்டமியற்றும் கவுன்சில் மத்திய சட்டமன்றமாக செயல்பட்டது.
- இது குட்டி பாராளுமன்றமாக அமைந்தது. மேலும் பிரிட்டிஷ் ஆட்சிமுறை விதிகளை பின்பற்றியது.
- ஆட்சிப் பணிக்கான போட்டித் தேர்வு முறையினை அறிமுகம் செய்தது.மேலும், இச்சட்டம் மத்திய சட்டமன்றத்தில் மறைமுகமாக இந்தியர்களின் பிரதிநிதித்துவம் ஏற்படுத்த வழிவகை செய்தது.
இந்திய அரசாங்க சட்டம், 1858
- இச்சட்டம் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி அதிகாரங்களைப் பறித்து ஆங்கில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வந்தது.
- இந்தியாவின் கவர்னர் ஜெனரல், வைஸ்ராய் ஆக அறிவிக்கப்பட்டார்.அப்போதிருந்த க.ஜெ. கானிங் பிரபு இந்தியாவின் முதல் வைஸ்ராய் ஆக அறிவிக்கப்பட்டார்.
- மாநிலங்களின் செயலர் என்ற கேபினட் அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவை பிரதிநித்துவம் செய்தார். இந்தியாவின் பிரிட்டிஷ் பாராளுமன்ற அங்கத்தினர் ஆனார்.
- அவர் பதினைந்து நபர் கொண்ட குழுவின் மூலம் ஆட்சி செலுத்துவார். அக் குழு அறிவுறுத்தும் பணியை மட்டுமே செய்தது. இறுதி முடிவு பாராளுமன்றத்தாலேயே எடுக்கப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம், 1861
- இச்சட்டம் இந்தியர்களை முதன்முறையாக சட்டமியற்றும் அதிகாரத்தை அடைய வழி செய்தது.
- அதாவது, வைரஸ்ராய்களுக்கு இந்தியர்களை சட்டமியற்றுவதற்கு நியமிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.
- இதனைப் பின்பற்றி, 1862- ஆம் ஆண்டில் கானிங் பிரபு வாரனாசி மற்றும் பாடியாலா அரசர்களையும் சர் தினகர் ராவ் என்பவரையும் நியமித்தார்.
மேலும், இச்சட்டம் மூலம் வைஸ்ராய்க்கு விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.இவ்விதிமுறைகள் சட்ட அவையை நடத்த ஏதுவாக வகுக்கப்பட்டன. - இச்சட்டம் கானிங் பிரபு அறிமுகம் (1859) செய்த துறை சார்ந்த நிர்வாகத்தை அங்கீகரித்தது.
- மேலும், இச்சட்டம் வைஸ்ரய்க்கு அவசரச் சட்டங்களை பிரகடனம் செய்யவும் அதிகாரம் அளித்தது.
- இவ் அவசர நிலைப் பிரகடனங்கள் மாகாணங்களின் ஒப்புதல் இன்றியும் அமையலாம், இச்சட்டம் ஆறு மாத காலம் அமலில் இருக்கும்.
இந்திய கவுன்சில் சட்டம், 1892
- மத்திய மற்றும் மாகாண சட்டமன்றங்களின் அரசியல் சார்பற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. ஆனால் அரசியல் சார்புள்ள உறுப்பினர் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.
- சட்டமன்றங்களின் பணி அதிகரித்து மேலும் பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை அளிக்கப்பட்டது மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் முறையும் விரிவுபடுத்தப்பட்டது.
- அரசல்லாத நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இரு வகையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- வைஸ்ராயின் வழியாக மாகாண சட்ட மன்றம் மற்றும் வங்காள வர்த்தக அமைப்பின் பரிந்துரையின் படி அமையும்.
- கவர்னர் வழியாக மாவட்ட அமைப்பின்படி, நகரமைப்பு, பல்கலைக் கழகங்கள், வர்த்தக கட்டமைப்பு ஜமீன்தாரர்கள் பரிந்துரையின் படியும் அமையும்.
இந்திய கவுன்சில் சட்டம், 1909
- மத்திய மற்றும் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
- மத்திய சட்ட மன்றம் 60 உறுப்பினர் உடையதானது. (முன்பாக 16).
- மத்திய சட்ட மன்றத்தில் அரசு உறுப்பினர்களின் பெரும்பான்மை தக்க வைக்கப்பட்டது. ஆனால் மாகாணத்தில் அரசல்லாத உறுப்பினர்களின் பெரும்பான்மை ஏற்படுத்தப்பட்டது.
- உறுப்பினர்கள் பட்ஜெட் மீது தணைக் கேள்விகள் கேட்கவும், தீர்மானம் நிறைவேற்றவும் அதிகாரம் அளிக்கப்பட்டது.
- சத்யேந்திர, சின்ஹா, வைஸ்ராய் கவுன்சிலின் முதல் இந்தியர் ஆனார். அவர் சட்ட உறுப்பினர் ஆனார்.
- இச்சட்டத்தின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், முதலில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டது.
- மின்டோ பிரபு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இந்திய அரசுச் சட்டம், 1919
- இச்சட்டம் 1921-ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. இது மாண்டேகு (இந்திய அரசு செயலர்) – செம்ஸ்ஃபோர்டு (இந்திய வைசிராய்) சட்டம் என்றழைக்கப்படுகிறது. இச்சட்டம் மாகாண சட்டத்துறைகளை இரண்டாக பகுத்தது.
- கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ளது. – ஒதுக்கீட்டுப் பகுதிகள்.
அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது – மாற்றப்பட்ட பொருண்மைகள் இது இரட்டை ஆட்சி முறை என்றழைக்கப்படுகிறது. - இச்சட்டம் நேரடித் தேர்தல் முறையை அறிமுகம் செய்தது. மேலும் இரண்டு அவைகள் கொண்ட மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது.
- வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ – இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்டது.
- இச்சட்டம் இந்தியாவிற்கான உயர் ஆணையர் என்ற புதிய அலுவலர் பதவியை லண்டனில் ஏற்படுத்தியது.
- இச்சட்டம் 1926-இல் தேர்வாணையத்தை என்ற புதிய அலுவலர் பதவியை லண்டனில் ஏற்படுத்தியது. இச்சட்டம் மத்திய பட்ஜெட்டிலிருந்து மாகாண பட்ஜெட்டைப் பிரித்தது.

இந்திய அரசுச் சட்டம் 1935
இச்சட்டம் அதிகாரத்தை மூன்றாகப் பிரிக்கிறது.
- மத்திய பட்டியல்
- மாகாணப் பட்டியல்
- பொதுப் பட்டியல்
எஞ்சிய அதிகாரங்கள் வைஸ்ராயிடம் ஒப்படைக்கப்பட்டது.இது இரட்டை ஆட்சி முறையினை முடிவுக்கு கொண்டுவந்து, மாகாணத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கியது.மொத்தமுள்ள 11 மாகாணங்களில், 6- இல் இரண்டு அவைகளை ஏற்படுத்தியது.அவை
- பெங்கால் 2. பம்பாய 3. மெட்ராஸ் 4. பீகார 5. அஸ்ஸாம் 6.ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகள்
- வகுப்புவாத பிரதிநிதித்துவம் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் அளிக்கப்பட்டது.
- 1858 – ஆம் ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்ட இந்திய கவுன்சிலை இச்சட்டம் கலைத்தது.
- மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. இது நாட்டின் பணப் பழக்கத்தை மேற்பார்வையிட உதவியது.
- இச்சட்டம் உச்சநீதிமன்றம் அமைய வழிவகுத்தது (1937).
இந்திய அரசியல் நிர்ணய சபை நவம்பர் மாதம் 1946 – இல் அமைச்சரவை தூதுக்குழு திட்டப்படி
- அரசியல் நிர்ணய சபை நவம்பர் மாதம் 1946 – இல் முதலில் அமைக்கப்பட்டது.
- மக்கள்தொகை அடிப்படையில் மாகாணங்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. பத்து லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு உறுப்பினர் என்ற விகிதத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை அமைந்தது.
- பிரிட்டிஷ் இந்தியப் பகுதியில் மறைமுகத் தேர்தல் மூலமாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- மேலும் உறுப்பினர்கள் விகிதப் பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- மன்னர் மாநிலங்கள் நியமான அடிப்படையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தது.
- ஜூலை, ஆகஸ்ட் 1946-இல் அரசியல் நிர்ணயச் சபைக்கான தேர்தல் நடந்தது.
இந்தியச் சுதந்திரச் சட்டம், 1947
- பிப்ரவரி 20, 1947 – இல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கிளமண்ட் அட்லி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வருகிறதென்றும். அதன் ஆட்சி அதிகாரம் பொறுப்புள்வர்களிடம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
- மவுண்ட்பேட்டன் பிரவு ஜூன் 3, 1947 – இல் இந்திய பிரிவினைத் திட்டத்தை ஏற்படுத்தினார்.
- இத்திட்டத்தை காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவை ஏற்றுக் கொண்டன.
- இத்திட்டம் இந்திய சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்ற உதவியது.
- இத்திட்டம் இந்தியாவை சுதந்திர நாடாக அறிவித்தது. ஆகஸ்ட்; 15, 1947, இந்தியா சுதந்திரம் அடைந்த நாளானது.
- மவுண்ட்பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லார் நேருவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தூர்.











