TNPSC  Exam Study Materials | General Tamil | Yuvasallinfo

 TNPSC  Exam Study Materials | General Tamil | Yuvasallinfo

6 ஆம் வகுப்பு – தமிழ்

முதல் பருவம்

இன்பத்தமிழ்

  • ஆசிரியர் பாரதிதாசன்.
  • இயற்பெயர் சுப்புரத்தினம்.

பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலானபுரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார்.  இவர் புரட்சிக்கவி, பாவேந்தர் என்றும் போற்றப்படுகிறார்

சொல்லும் பொருளும் 

நிருமித்த – உருவாக்கிய, விளைவு – விளைச்சல், சமூகம் – மக்கள் குழு

தமிழ்க்கும்மி

  • ஆசிரியர் பெருஞ்சித்திரனார். 
  • இயற்பெயர் மாணிக்கம்.
  • பாவலரேறு’ என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்.
  • கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
  • தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். 

சொல்லும் பொருளும்

ஆழிப்பெருக்கு – கடல் கோள்,

மேதினி – உலகம்,

ஊழி – நீண்டதொருகாலப்பகுதி,

உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை.

வளர் தமிழ்

மூத்தமொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” – பாரதியார்.

“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” – என்றுதமிழ்மொழியை வியந்தவர் பாரதியார்.

வளமை மொழி

தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்.

தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் மிகுந்தது தமிழ்மொழி

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களைக் கொண்டது. 

திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களைக் கொண்டது.  சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களைக் கொண்டது. 

துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள்.

கட்டுரை, புதினம், சிறுகதை போன்றவை உரைநடை

வடிவங்கள். 

“தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” என்ற வரிகள் இடம்பெறுவது –தொல்காப்பியம். 

“இதுநீ கருதினை ஆயின்” – சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம்.

எளிய மொழி

தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துக்களாகவே அமைந்துள்ளன.

வலஞ்சுழி எழுத்துக்கள் – அ , எ, ஔ, ண, ஞ 

இடஞ்சுழி எழுத்துக்கள் – ட, ய, ழ

சீர்மை மொழி

சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்

பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் என்று வழங்கினர்.

பாகு + அல் + காய் = பாகற்காய்

சீரிளமை = சீர்மை + இளமை

பூவின் ஏழு நிலைகள் – அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.

தாவர இலைப் பெயர்கள்

தாள் – நெல், வரகு

ஓலை – பனை, தென்னை

தழை – மல்லி

கூந்தல் – கமுகு

தோகை – கரும்பு, நாணல்

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள சில தமிழ் சொற்கள்

உலகம் – தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை நூல்களில் இடம்பெற்றுள்ளது.

வேளாண்மை – கலித்தொகை, திருக்குறள்

உழவர் – நற்றினை

மகிழ்ச்சி – தொல்காப்பியம், திருக்குறள்

அரசு – திருக்குறள்.

கனவு பலித்தது

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால் நாழி – ஒளவையார்.

“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” –தொல்காப்பியம்.

“கடல்நீர் முகந்த கமஞ்சூல் எழிலி” – … கார்நாற்பது.

“நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” …… பதிற்றுப்பத்து. 

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்”

நற்றிணை.

“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” ………… கபிலர்.

சிலப்பதிகாரம்

ஆசிரியர் இளங்கோவடிகள்.

சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர்.

காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம்.

முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் போற்றப்படுகிறது. * சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள். * திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. *

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” – இளங்கோவடிகள்(சிலப்பதிகாரம்)

ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும்” – இளங்கோவடிகள்.

சொல்லும் பொருளும்

கொங்கு – மகரந்தம், திங்கள் – நிலவு, அலர் – மலர்தல், திகிரி – ஆணைச்சக்கரம். பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில், மேரு – இமயமலை, நாமநீர் – அச்சம் தரும் கடல், அளி – கருணை .

காணி நிலம்

ஆசிரியர் பாரதியார்.

இயற்பெயர் சுப்பிரமணியன்.

எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய நூல்களைஇயற்றியுள்ளார்.

‘வானை அளப்போம் கடல் மீனையளப்போம்’ – மகாகவி பாரதியார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி

காணி நிலம் வேண்டும் – பாரதியார்.

காணி – நில அளவைக் குறிக்கும் சொல்.

மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்.

சித்தம் – உள்ளம்.

சிறகின் ஓசை

பறவைகள் இடம் பெயர்தலை ‘வலசைபோதல்’ என்பர்.

நீர் வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை ‘கப்பல் பறவை’ (frigate bird). இது தரையிரங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

“நாராய் நாராய் செங்கால் நாராய்” – என்று பாடியவா சத்திமுத்தப்புலவர். 

“காக்கை குருவி எங்கள் சாதி” – என்று பாடியவர் பாரதியார்.  தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏழுவீர் ஆயின் – பறவைகள் வலசை வந்தசெய்தியைக் குறிப்பிடுகின்றன.  ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதியாகிறது.

வெளிநாட்டுப் பறவைகளுக்கு புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

அழிந்து வரும் பறவையினம் சிட்டுக் குருவி. சிட்டுக்குருவி கூடு கட்டிய பின்மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

தகவல் துளி

இந்தியாவின் பறவை மனிதர் – டாக்டர் சலீம் அலி.

தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ என்றுபெயரிட்டவர். – டாக்டர் சலீம் அலி.

உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவையினம் ஆர்டிக் ஆலா’.

பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி.

உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20.

கிழுவனும் கடலும்

கிழவனும் கடலும் ( The old man and the sea ) 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது.

இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே

திருக்குறள்

வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்பு பெயர்கள் உண்டு.

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகள் கொண்டது. 

பதிணென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டது.

திருக்கறளானது உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து என பல சிறப்புப் பெயர்களில் வழங்கப்படுகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அறிவியல் ஆத்திசூடி

ஆசிரியர் நெல்லை சு.முத்து

தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.

இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்.

ஔடதம் – மருந்து

கணியனின் நண்பன்

காரல் கபெக் என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.

அதில் ரோபோ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.

ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள். 1997 ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது.

அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய ‘டீப் புளூ’ என்னும் மீத்திறன் கணினி அவருடன் போட்டியிட்டது. 

உலகிலேயே முதன் முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா.

ஐக்கிய நாடுகள் சபை புதுமையின் வெற்றியாளர் என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது.

தகவல் துளி

சர்.சி.வி. இராமன் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவு என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

இந்த கண்டுபிடிப்பு அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது.

இதுவே அறிவியலுக்கான முதல் நோபல் பரிசு ஆகும்.

எனவே பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் தேசிய அறிவியல் நாள் என கொண்டாடி வருகிறோம்.

For More TNPSC Materials Join:

Whatsapp

Telegram

Join HereJoin Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!